காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த 14 வர்த்தகர்களுக்கு அபராதம்!

Monday, February 20th, 2017

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறி காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் கடந்த வாரம் பருத்தித்துறை நியாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் போதே 14 வர்த்தகர்கள் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதற்கு வைத்திருந்தமை தெரியவந்தது. குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அதிகாரசபை தொடுத்த வழக்கு கடந்த வெள்ளிககிழமை நீதமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு 14 வர்த்தகர்களுக்கும் தலா 25,500ரூபா அபாராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

food-d

Related posts: