காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு – போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் அறிவிப்பு!

Friday, August 20th, 2021

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதான காரியாலங்களும், பிரதேச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.

இதன்காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதிமுதல் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான கால இடைவெளியில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் நிறைவடைந்த காலத்தில் இருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கான திகதியினை முற்பதிவு செய்யும் நடைமுறையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நேரம் ஒதுக்கிக்கொண்டவர்களுக்கான செயற்பாடுகளும் இடைநிறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: