காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு மேலும் சலுகைக் காலம் – மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர்!

Monday, May 3rd, 2021

கொரோனா பரவல் காரணமாக காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்காக மூன்று மாதம் மற்றும் ஆறு மாத நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி மார்ச் 21 ஆம் திகதி முடிவடையும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக மூன்று மாத கால நிவாரண காலம் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளர்.

அதேவேளை ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து செப்ரெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான ஆறு மாத கால நிவாரண காலம் வழங்கப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: