காலம் தாழ்த்தாது வரி மறுசீரமைப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்படி சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை!

இலங்கை அரசாங்கம் வரி மறுசீரமைப்பு கொள்கைகளை காலம் தாழ்த்தாது அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனாக இலங்கை பெற்றுக்கொண்டது. எனினும் கடன் பெறும்போது வாக்குறுதி அளிக்கப்பட்டமைக்கு அமைய மாற்றங்கள் செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வற் வரி அதிகரிப்பு குறித்த கொள்கைகளை அரசாங்கம் அமுல்படுத்த முயற்சித்த போதிலும் உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய அந்தக் கொள்கையை அமுல்படுத்த முடியவில்லை எனச் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் அரசாங்கம் விரைவில் இந்த வரி அறவீட்டுச் சட்டத்தை மீள அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் சில பொருளாதார கொள்கைகளை அரசாங்கம் சரியான முறையில் அமுல்படுத்தி வருவதாகவும் அது பாராட்டுக்குரியது எனவும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Related posts:
|
|