காலபோக நெற்செய்கைக்கான உரமானிய கொடுப்பனவாக ரூ.30 கோடி!

Wednesday, November 29th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தின் 2017 – 2018 ஆம் ஆண்டுக்கான கால போக நெற்செய்கைக்கான உரமானியக் கொடுப்பனவாக 30 கோடியே 88 இலட்சத்து 53 ஆயிரத்து 750 ரூபாவை வழங்குவதற்கு புள்ளிவிபரத் தகவல்கள் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திறைசேரியில் இருந்து இதற்குரிய பணம் விடுவிக்கப்பட்டதும் விவசாயிகளின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலக்கத்திற்கு பணம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கமநல அபிவிருத்தி  திணைக்களத்திற்குட்பட்ட 8 கமநல சேவைகள் நிலையங்களின் கீழ் 2017 ௲ 2018 கால போக நெற்செய்கையை மேற்கொள்ளவுள்ள 17 ஆயிரத்து 111 விவசாயிகளில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபா வீதம் 5 ஏக்கர் நெற்செய்கைக்குரிய உரமானியக் கொடுப்பனவாக ரூபா 25 ஆயிரம் மட்டும் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழ் 5 ஆயிரத்து 54 விவசாயிகளுக்கு 9 கோடியே 91 இலட்சத்து 48 ஆயிரத்து 750 ரூபாவும் இராமநாதபுரம் கமநலசேவை நிலையத்தின் கீழ் 1312 விவசாயிகளுக்கு 1 கோடியே 94 இலட்சத்து 78 ஆயிரத்து 750 ரூபாவும் புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்தின் கீழ் 2 ஆயிரத்து 637 விவசாயிகளுக்கு 5 கோடியே 66 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் அக்கராயன்குளம் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள ஆயிரத்து 635 விவசாயிகளுக்கு 2 கோடியே 61 இலட்சத்து 81 ஆயிரத்து 250 ரூபாவும் முழங்காவில் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 862 விவசாயிகளுக்கு ஒரு கோடியே 13 இலட்சத்து 56 ஆயிரத்து 250 ரூபாவும் பூநகரி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 2 ஆயிரத்து 900 விவசாயிகளுக்கு 5 கோடியே 85 ஆயிரத்து 50 ரூபாவும் பளை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 706 விவசாயிகளுக்கு 82 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவும் உருத்திரபுரம் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 2 ஆயிரத்து 5 விவசாயிகளுக்கு 3 கோடியே 69 இலட்சத்து 73 ஆயிரத்து 750 ரூபாவுமாக 17 ஆயிரத்து 111 விவசாயிகளின் 61 ஆயிரத்து 770.75 ஏக்கர் நெற்செய்கைக்கு 30 கோடியே 88 இலட்சத்து 53 ஆயிரத்து 750 ரூபாவை உரமானியக் கொடுப்பனவாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஆயகுலன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: