காலநிலை மாற்றம் – பாடசாலை மாணவர்களுக்கு எச்சரிக்கை!

Thursday, March 14th, 2019

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து பாடசாலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

வட மாகாணத்தில் அதிகரித்துள்ள வெப்பநிலை தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடுமுழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: