காலநிலை சீர்கேட்டால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு!

Wednesday, May 18th, 2016

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 82ஆயிரத்து 924 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3 லட்சத்து 62 ஆயிரத்து 374 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 48 ஆயிரத்து 998 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதில் அரநாயக்கவில் கூடிய உயிரிழப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் 229 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 2647 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: