காலநிலையில் மாற்றம்!
Saturday, April 21st, 2018
நிலவி வந்த சீரற்ற காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து தற்காலிகமாக சிறிதளவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது
அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும், நாட்டின் மேல் மற்றும் தென் கரையோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பெண் சட்டத்தரணி மீது சிறைக் காவலர்கள் நீதிமன்றில் முறையீடு!
கடமையில் ஈடுபடும் பொலிசாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சீனா பயணம்!
|
|