காலநிலையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வல்லரசு நாடுகள் உதவவேண்டும்!

Friday, November 18th, 2016

காலநிலை தொடர்பான பரிஸ் பிரகடனத்தில் வல்லரசு நாடுகளும் இணைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பாக மொறக்கோவின் மறக்கஸ் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் உயிர் அச்சுறுத்தலை இல்லாதொழிக்க வல்லரசு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்

2030 ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ளல் , காலநிலை மாற்றங்களை இல்லாதொழித்தல் என்பனவற்றுக்காக கூட்டான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். இலங்கை காலநிலை மாற்றம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தியுள்ள தீவாகும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வெப்ப நிலை அதிகரிப்பு, வெள்ளம், எதிர்பாராத மழைவீழ்ச்சி, கடற்கோள் அனர்த்தம் என்பனவற்றுக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளதாகவும் , காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார். சுற்றாடல் நெருக்கடி பற்றி சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைய இலங்கையின் கொள்கையை தயாரிப்பதற்காக ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார்.

69ad29e4df2e3aa8e2be38a34afb405e_XL