காலத்தின் பதிவுகளை பாதுகாக்கும் வகையில் படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, April 7th, 2016

காலத்தின் பதிவுகளை பேணிப்பாதுகாக்கும் வகையிலும் எதிர்கால சந்ததிக்கு வழிகாட்டும் வகையிலுமான பொறுப்பை உணர்ந்துகொண்டு படைப்பாளிகள் படைப்புகளை உருவாக்க முன்வரவேண்டுமென டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும்போது.

நாகரீகம் வளர்ச்சியடைந்த காலந்தொட்டு மனிதவாழ்வோடு கலைப் பாரம்பரியங்களும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.

வரலாற்றைக் கடந்துநிற்கும் இலக்கியங்களையும் படைப்புகளையும்  அவ்வப்போது கலைஞர்களும் துறைசார்ந்த படைப்பாளிகளும் மிகச் சிறந்தமுறையில் கவின்கலைகளான இயல் இசைநாடகம் என்பவற்றினூடாக பதிவுசெய்துள்ளனர்.

இவ்வாறாக தமிழ் பேசும் கலைஞர்களும் படைப்பாளிகளும் எமது சமூகத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறுவகையிலான படைப்புகளை படைத்துள்ளனர்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ்வாறான படைப்புகளை வெளிக்கொணர்வதில் படைப்பாளர்கள் எதிர்கொண்ட பாரியநெருக்கடிகளையும்  இடர்பாடுகளையும் நான் நன்கறிவேன்.

இருந்தபோதிலும் இன்றுள்ள அமைதிச் சூழலில் காலத்தின் பதிவுகளை பேணிப்பாதுகாக்கும் வகையிலும் எதிர்காலசந்ததிக்கு வழிகாட்டும் வகையிலுமான பொறுப்பையும் உணர்ந்துகொண்டு கலைஞர்களும் படைப்பாளர்களும் படைப்புகளை உருவாக்க முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறான படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களே காலத்தின் பதிவுகளை பதிவுசெய்த படைப்பாளர்களாகவும் கலைஞர்களாகவும்,காலத்தின் கண்ணாடிகளாவும் இருக்கமுடியுமென்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: