காலஞ்சென்ற தோழர் சேகருக்கு செயலாளர் நாயகம் கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!

Monday, May 9th, 2016

காலஞ்சென்ற அமரர் செல்லையா செல்வராசாவின் (தோழர் சேகர்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்

கரம்பொன் ஊர்காவற்றுறையில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றைய தினம் (9) சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரான அமரர் செல்வராசா சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு காலமானார். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் கட்சியின் சார்பில் செயலாளர் நாயகம் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

அன்னாரது இறுதி கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டக்ளஸ் தேவானந்தாவுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகாண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

6

4

7

2

1

Related posts: