காலஞ்சென்ற அமரர் இந்திராணி பாக்கியநாதனின் குடும்பத்தினருக்கு டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆறுதல்!

Tuesday, October 4th, 2016

காலஞ்சென்ற அமரர் திருமதி இந்திராணி பாக்கியநாதனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

பத்தினியார் மகிழங்குளம் வவுனியாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவம் கொண்ட திருமதி இந்திராணி பாக்கியநாதன் கடந்த 27 ஆம் திகதி காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த 1ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றிருந்தது. அன்றையதினம் அன்னாரது இறுதிச்சடங்கில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பங்குகொள்ளாதிருந்த நிலையில் நேற்றையதினம் (03)  அன்னாரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

அமரர் இந்திராணி பாக்கியநாதன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி நிர்வாக செயலாளருமான சிவகுரு பாலகிருஸ்ணனின் (ஜீவன்) மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.

unnamed (1)

unnamed

unnamed (2)

Related posts: