காற்று மாசு நிறைந்த பகுதியாக கண்டி தெரிவு!

இலங்கையில் அதிக காற்று மாசடையும் இடமாக கண்டியிலுள்ள குட்ஷெட் பேருந்து நிலையம் அடையாளம் காணப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பிரதான 10 நகரங்ளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கண்டி – கொழும்பு நகரங்களுக்கு செல்லும் பிரதான பேருந்து நிலையமான குட்ஷெட்டில் காணப்படுகின்ற காற்று மாசு நிலைமை, உலக சுகாதார அமைப்பின் முழுமையான காற்று மாசுவை விடவும் அதிகமாகும்.
கண்டி நகரம் மலைகளினால் மூடப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் எச்.டீ.எஸ்.பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய கண்டி மணிக்கூண்டு கோபுரம் மற்றும் கொழும்பு வீதியில் காணப்படுகின்ற காற்று மாசு, உலக சுகாதார அமைப்பின் காற்று மாசு தரத்தை விட அதிகம் என தெரியவந்துள்ளது.
Related posts:
|
|