காற்று சீராக்கி இயந்திர பயன்பாட்டுக்கு புதிய சட்டவிதி!

Wednesday, May 3rd, 2017

நாட்டில் காற்று சீராக்கி இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான புதிய சுற்றுநிருபம் கொண்டுவரப்படும் என்று மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை சேமிக்கும் மூலோபாயமாக இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு தேவையான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சூரிய எரி சக்தி பெற்றுக்கொடுப்பதற்கான புதிய சுற்றுநிருபமும் கொண்டுவரப்படவுள்ளது என்றும் சூரிய எரிசக்தியை பெற்றுக்கொள்வதற்கு 40 சுற்றளவு அடிக்கு மேற்பட்ட கூரையைக்கொண்ட வீடொன்றே தேவையென்றும் அமைச்சர் மேலும்  அவர் தெரிவித்துள்ளார்.


தாழமுக்க நிலையின் காரணமாக அவதானத்துடன் செயற்பட வலிறுத்தல்!
கடற்கரை வீதி புனரமைக்கப்படவில்லை: சிரமங்களுக்கு மத்தியில் போக்குவரத்து!
தேசிய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வோம் - ஜனாதிபதி
சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
பணிப்புறக்கணிப்பு - தபால் பரிமாற்ற நடவடிக்கைகள் பாதிப்பு!