காற்றின் வேகம் அதிகரிக்கலாம்! கடற்பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை!!

Wednesday, September 28th, 2016

நாட்டின் கடற்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை கடற்கரைக்கு அருகில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் தொக்கம் 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரிடம் வானிலை அவதான மையம் கோரிக்கை முன் வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 FotorCreated-189

Related posts: