காற்றின் வேகம் அதிகரிக்கலாம்!

Thursday, May 19th, 2016

எதிர்வரும் சில தினங்களுக்கு இலங்கையை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்க வாய்புள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி காங்கேசன்துறை அருகில் நிலைகொண்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அது , தொடர்ந்தும் நாட்டை விட்டு நகர்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நாட்டின் வடக்கு பிரதேசங்களில் நிலவிய மழையுடன் கூடிய காலனிலை குறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் கடலையண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: