காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் இன்று பிரதமரால் திறந்து வைப்பு!

இலங்கையின் விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று திங்கட்கிழமை மன்னாரில் திறந்து வைக்கப்படவுள்ளது.
மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.
மன்னார் ௲ தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் இந்த மின் உற்பத்தி மையம் அமைந்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!
தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முகுந்தன் கனகே இராஜினாமா!
மனுக்கள் அனைத்தையும் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் அறிவிப்பு!
|
|