காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாட்டின் பல பகுதிகளில் மேக மூட்டமான நிலை – வடக்கு, கிழக்கு, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை!

Wednesday, December 21st, 2022

தெற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ஊவா மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: