காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் இன்றுமுதல் குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Saturday, November 12th, 2022வடகிழக்கு கரையோரத்தில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் இன்றுமுதல் நாட்டின் வானிலையில் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், இன்று மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி தீர்வு பெற்று தர முயல்வேன் - வடக்கு மாகாண ஆளுநர் பி எச் எம் சாள்ஸ் தெ...
406 புதிய வைத்தியர்கள் நியமனம் - மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலையிலும் திருத்தம் - அமைச்...
உயர்தர பரீட்சை - பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள்அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் - பரீ...
|
|