காரைநகர் கோவளம் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் கைது!

Thursday, June 16th, 2016

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகருக்குத்  தெற்கே கோவளம் கடற்பரப்பினுள் வைத்து மூன்று இந்திய மீனவர்கள் நேற்று  (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பினுள் இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இவர்கள் மூவரையும் கைது செய்ததுடன் இதன் போது  கைப்பற்றப்பட்ட  விசைப்படகினைக்  காங்கேசன்துறை கடற்படைத்தளத்துக்கு எடுத்து வந்துள்ளனர்.

கைதான மூவரும் கடற்றொழில் நீரியல் வளத்துறை மாவட்ட அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மூன்று இந்திய மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தெரிவித்தார்.

54714068-8d05-4e7b-a818-044d6e5716ce

Related posts: