காரைநகர் காணி ஒன்றில் வெடிபொருள் – நாளையதினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024

யாழ் காரைநகரில் காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கடற்படை முகாம் அமைந்திருந்த மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து 50 மீற்றர்கள் தொலைவில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த அகழ்வுப் பணியை இன்றையதினம் மேற்கொள்வதற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், இன்று ஜே.சி.பி இயந்திரம் இல்லாத காரணத்தால், மீண்டும் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு நாளையதினம் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

000

Related posts: