காரைநகர் கசூரினா கடற்கரைக்காக பயன்பாட்டு வரி  ஈ.பி.டி.பியின் முயற்சியால் 50 வீதத்தினால் குறைப்பு!

Monday, May 14th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளருமான வீரமுத்து கண்ணனின் கோரிக்கைக்கு அமைவாக காரைநகர் சுற்றுலா தளமான கசூரினா கடற்கரையில் நீராடுவதற்காக அறவிடப்படும் வரியினை 50 வீதத்தினால் குறைப்பதற்கு காரைநகர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

காரைநகர் பிரதேச சபை அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச சபை உறுப்பினர் வீரமுத்து கண்ணனால் குறித்த கடற்கரைக்கான வரி அறவீட்டை முற்றாக நிறுத்துமாறு கோரி பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த சபையின் உறுப்பினர்கள் பிரேரணையை ஏற்றுக்கொண்டதுடன் குறித்த விடயத்திற்கு தீர்வாக தற்போது அறவிடப்படும் வரியை 50 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதன் பிரகாரம் பெரியவர்களுக்கு 10 ரூபாவும் சிறுவர்களுக்கு 05 ரூபாவும் அறவிடப்படும் எனவும் இந்த நடைமுறை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு அனுமதி கிடைத்ததும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: