காரைநகரில் 4 சிறுவர்கள் இடங்கலாக 2 நாட்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று !

Wednesday, May 26th, 2021

யாழ்ப்பாணம் காரைநகரில் நேற்றயதினம் 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

காரைநகரில் நேற்று 10 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலும் 7 பேருக்கு தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை நேற்றயதினம் 10 வயது, 11வயது, 12 வயதுடைய 3 சிறுமிகளுக்கும், 14 வயதான ஒரு சிறுவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related posts: