காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவி உயிரிழப்பு!

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர மாணவியான ஜெயந்திநகரைச் சேர்ந்த செ.ரஜிதா டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியிரந்த நிலையில் உயிரிழந்தார்.
இரண்டு நாள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மாணவி பின்னர் குணமடைந்த நிலையில் மீளவும் அவருக்கு கை, கால்களில் வலி எனத் தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு அபாயம் ஏற்பட்டிருப்பதை சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை என்பன எச்சரித்திருந்தன. பாடசாலை சூழல்களை துப்புரவாக வைத்திருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கரையோர பாதுகாப்பை வலுப்படுத்த இரண்டு படகுகளை ஜப்பான் வழங்கும்!
உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் - நேபாளம்!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு ரூ.470 இலட்சம் செலவில் புதிய விடுதி!
|
|