காபன் வரி செலுத்தாதவர்களுக்கு டிசம்பர் வரை கால அவகாசம் – நிதி அமைச்சு!

Tuesday, July 9th, 2019

அரசால் விதிக்கப்பட்ட காபன் வரியை இதுவரை செலுத்தாதவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவதற்குள் செலுத்தி முடிக்குமாறு நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

மோட்டார் வாகனங்களுக்கு ஒவ்வொரு வருடமும் பெற்றுக் கொள்ளப்படும் வருமான உத்தரவுப் பத்திரத்தின் போது இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் காபன் வரியை அறவிடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இருப்பினும், சில பிரதேச செயலகங்களில் இன்னும் அந்த வரியை அறவிடுவதற்கான முறைமையொன்று காணப்படாதுள்ளதாகவும், ஜனவரி முதல் இதுவரை விநியோகித்துள்ள வாகன வருமான உத்தரவுப் பத்திரத்துக்கு காபன் வரியை அறவிடாதிருந்துள்ளதாகவும் பிரதேச செயலகங்கள் மீது குற்றச்சாட்டை நிதி அமைச்சு சுமத்தியுள்ள நிலையில் குறித்த வரியை அறவிட முறைமையொன்றை தயார் செய்யுமாறு நிதி அமைச்சு சுற்றுநிருபம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: