காதலர் தினத்தில் விழிப்புடன் இருக்கும் காவல்துறையினர் – விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

காதலர் தினத்தன்று சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் காவல்துறையினர் விழிப்புடன் இருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதற்கும், கலந்து கொள்வதற்கும் தடை இல்லை என்றாலும், கடந்த ஆண்டுகளின் அனுபவங்களின் அடிப்படையில், காவல்துறையினர் விழிப்புடன் இருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் மற்றும் நிகழ்வுகளை சோதனை செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“விருந்துபசாரங்களில் கலந்துகொள்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் பங்கேற்பவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிவதற்கு, விருந்துபசாரங்களிடையே காவல்துறையினர் சோதனை நடத்துவார்கள் என்று காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|