காணி எல்லைகளை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை – உறுதிபடத் தெரிவித்தார் பசில் ராஜபக்ஷ !

Thursday, December 17th, 2020

இலவச உரம் மற்றும் நீர் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் பாரிய தொகையை விவசாயிகளுக்காக ஒதுக்கியுள்ளது. இதனூடாக விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த விலையை பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கிறது .

எனினும், இதற்கு சமமான வகையில் நுகர்வோருக்கும் அந்த நிவாரணம் கிடைக்குமா என்பது சந்தேகம். அரசிடம் நிலையான நெல் இருப்பு இல்லாமை இதற்கு காரணமாகும். அடுத்த போகம் முதல் அனைத்து விவசாயிகளிடமிருந்தும் 8 முதல் 10வீத நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் கிராம மட்டத்தில் களஞ்சியங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு கூட்டுறவு மற்றும் விவசாயிகள் சங்கங்களுக்கு பொருத்தமான களஞ்சியங்கள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறான களஞ்சியசாலைகளுக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்வனவிற்கு அவசியமான நிதியும் அரசாங்கத்தினால் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக சமூர்த்தி மற்றும் கூட்டுறவிற்கும் இணைந்து கொள்ளலாம். இன்று ஏராளமான கூட்டுறவு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை முறையாக விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அரசு போதுமான உரத்தை இறக்குமதி செய்துள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் உரம் கிடைக்காவிடின் உரிய பயனை பெற முடியாது. உரத்துக்காகவே ஒரு இராஜாங்க அமைச்சர் இருக்கிறார். ஒரு உர பணியகம் உள்ளது. உரங்களை இறக்குமதி செய்வதற்கு அதிக பணம் ஒதுக்கப்படுகிறது. உரமானது துறைமுகத்திலிருந்து நேரடியாக இந்த மாகாணத்திற்கு அனுப்பப்படுகிறது. சமூக அமைப்புகளின் ஊடாக கிராம நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரை கிராம அபிவிருத்தி சங்கங்களின் நிதி வரம்பை அதிகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன், காணி எல்லை நிர்ணயம் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. காணி எல்லைகளை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை. நாட்டில் காணப்படும் ஒரு முக்கியமான பிரச்சினையான வடக்கு,மத்திய மாகாண மக்களுக்காக இதுவரை செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களிலிருந்தும் நல்ல பலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

புதிய சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை கொண்டுவர சுற்றுலாதுறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீ...
இலங்கை - அவுஸ்திரேலிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவு!
கொரோனா கட்டுப்படுத்தலுக்கு யாழ் மக்களின் ஒத்துழைப்பு போதாதுள்ளது - யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளப...