காணி உரிமை தொடர்பாக அரச நிபந்தனைகளை தளர்த்த நடவடிக்கை!

அரசாங்கத்தின் காணிகளில் குடியிருப்பவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படுமென்று காணி அபிவிருத்தி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இந்தக் காணிகளுக்கான உரிமைகளைப் பெறுவதில் தற்போதுள்ள அரச நிபந்தனைகள் காரணமாகவும் சிரமங்களுக்கு உள்ளானார்கள். இதனால் இந்த நிபந்தனைகளைத் தளர்த்தி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இது தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்!
சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலக உணவு விவசாய அமைப்பு உதவி!
இன்னும் ஓரிரு மாதங்களில் ஒமைக்ரொன் திரிபால், 5 ஆம் அலை உருவாகும் ஆபத்து - அரச மருத்துவ அதிகாரிகள் சங...
|
|