காணி உரிமங்களை பெற்றுக்கொள்ள உதவி புரியுங்கள் – அரியாலை கிழக்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!
Tuesday, November 22nd, 2016தமது குடியிருப்பு காணிகளுக்கான உரிமங்களை பெற்றுத்தருமாறு அரியாலை கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றையதினம் குறித்த பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே குறித்த பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –
நீண்டகாலமாக தாம் குறித்த காணிகளில் வாழ்ந்து வருவதாக தெரிவித்த குறித்த பகுதி மக்கள் தாம் வாழும் காணிகளுக்கு நிரந்தர காணி உரிமங்கள் இன்றுவரை பெற்றுக்கொள்ள முடியாமையால் உள்ளதாகவும் இதனால் தாம் அரசினால் வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறுபட்ட சலுகைகளை பெற்றுக்கொள்வதில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் தமது குடியிருப்புகள் தற்காலிகமானதாக அமைக்கப்பட்டுள்ளதால் தாம் பல அசௌகரியங்களை சந்திக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்த குறித்த பகுதி மக்கள் தாம் நிரந்தர குடிமனைகளை அமைப்பதற்கு தமது காணிகளுக்கான உரிமங்களை பெற்றுத்தருமாறும் இரவீந்திரதாசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களது நிலைமைகளையும் தேவைப்பாடுகளையும் ஆராய்ந்தறிந்தகொண்ட இரவீந்திரதாசன் குறித்த விடயத்தை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|