காணி உரிமங்களை இரத்துசெய்து, காணி அற்றோருக்கு வழங்குங்கள் – வவுனியா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உத்தரவு!

Wednesday, September 23rd, 2020

அரச ஊழியர்களிற்காக ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் வீடுகளை அமைத்த நிலையில் குடியிருக்காதவர்களது காணிகளை இரத்துசெய்துவிட்டு, காணிவீடு அற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட ஒரங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆளுநர் திருமதி சார்ள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் இணைத்தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றிய காணி அற்ற 600 க்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அவற்றில் 131 வீடுகள் யாருமற்ற நிலையில் வெறுமையாக இருப்பதாக வீடமைப்பு அதிகாரசபை அதிகாரியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தையை போலவே வவுனியா சாளம்பைக்குளம் மற்றும் சிங்கள பிரிவுகளிலும் வீட்டுத்திட்டத்தினை பெற்றபின்னர் பொது மக்கள் வசிக்காத வீடுகள் பல இருக்கின்றன.

அவையும் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தான். எனவே அவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் வீடுகள் உள்ள பலருக்கு வவுனியா நகரப்பகுதியிலும் வீடுகள் உள்ளன. எனவே வெறுமையாகவுள்ள வீடுகளில் வசிக்காதவர்களது காணிகளை இரத்து செய்துவிட்டு வீடற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

Related posts: