காணி உரித்துகள் பெண்களின் பெயர்களிலும் வழங்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Thursday, May 30th, 2024

பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரித்துகள் ஆண்களின் பெயர்களில் மாத்திரம் அல்லாது பெண்களின் பெயர்களிலும் வழங்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரித்துகள் வழங்கப்படவுள்ளதாக மே தினத்தன்று வெளியிட்ட அறிவிப்பை பிற்போட நேரிட்டதாக அவர் நேற்றையதினம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: