காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்துக்கு அனுமதியளித்தது அமைச்சரவை !

2016 ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு 7 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்துள்ளார்.
இந்தக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் உறுப்பினர்களாக ஜயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹான் பீ பீரிஸ், நிமல்கா பெர்ணான்டோ, மிராக் ரஹிம், சட்டத்தரணி சோமசிறி லியனகே மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கையில் இந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல் போனோரை தேடும் பணிகள் முன்னெடுப்பதுடன் நீதியைப்பெற்றுக்கொடுக்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வில்பத்து தேசிய சரணாலயம் வழமைக்கு!
மொத்த விற்பனையாக மண்ணெண்ணெய் விற்பனை செய்யத் தடை!
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலருக்கு திடீர் இடமாற்றம்!
|
|