காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு விரைவில் தீர்வு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே தெரிவிப்பு!

Saturday, February 27th, 2021

காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு தீர்வொன்றை காண்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபூண்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்கவுள்ளார். உண்மையில் இந்த விவகாரத்திற்கு முடிவை காண்பதற்கு அவர் உறுதிபூண்டுள்ளார். அத்துடன் காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி அவர்களின் பிரச்சினைகளை செவிமடுக்க விரும்புகின்றார் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி  கோட்டபய ராஜபக்ச பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் ஒரு தீர்வை முன்வைக்க விரும்புகின்றார் . இது விரைவில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: