காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டத்தில் ஈ.பி.டி.பி பங்கெடுப்பு!

02 Monday, March 20th, 2017

இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும், யுத்தத்தின் பின்னரும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்து தீர்க்கமான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களது உறவுகள் வடமராட்சி கிழக்கு பகுதியில் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு தமது ஆரவை வழங்கியிருந்தனர்.

யுத்தம் நிறைவடைந்து 8 வருங்கள் கடந்துள்ள போதிலும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்து உரிய பதில் எதுவும் இதுவரை கிடைக்காததால் தமது தேடுதலுக்கு உரிய பதிலை தருமாறு கோரி தொடர்ச்சியாக வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் முன்னாள் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் வடமராட்சி கிழக்கு பிரதேச உதவி நிர்வாக செயலாளர் சரவணபவன் சிவகுமார் (பவானி ) ஆகியோர் கலந்துகொண்டு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவை வழங்கியிருந்தனர்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின்போது நடைபெற்றதாக கூறுப்படும் குற்றங்கள் குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு. வவுனியா மற்றும் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

02


 தீர்வை சீர்குலைக்கும் விக்கி : வாசுதேவ நாணயக்கார
பாடகர் எஸ்.ஜி.  சாந்தனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!
பெண்ணியம் என்பது மார்ச் 8 ஆம் திகதி மட்டும் பேசப்படும் பொருளல்ல - யாழ் மாவட்ட கூட்டுறவு சபை செயலாளர்...
பணிப்புறக்கணிப்பானது கவலையான விடயம் – ஜனாதிபதி.!
இரட்டை குடியுரிமையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிக்கலும்!