காணாமல்போனோர் சட்டத்தை மீளப்பெற வேண்டும் – இராணுவத்தை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு!
Thursday, September 21st, 2017காணாமல்போனோர் தொடர்பான பணியக சட்டத்தை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என இராணுவத்தை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பலவந்தமாக காணாமல் போதல்களிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பளிப்பது தொடர்பான சர்வதேச சமவாயத்தை அங்கீகரிப்பதற்கான சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது.
இந்த நிலையில், பலவந்தமாக காணாமல் போதல்களிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பளிப்பது தொடர்பான சர்வதேச சமவாயத்தை அங்கீகரிப்பதற்கான சட்டமூலத்துக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இராணுவத்தை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு உட்பட சில அமைப்புகளால், நாடாளுமன்ற வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த சட்டமூலத்தை மீளப் பெறுவதை விடுத்து, நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்திலிருந்து அதனை நீக்க அரசாஙகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராணுவத்தை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Related posts:
|
|