காட்டு யானைகளைக் காப்பாற்ற தொலைபேசியில் குறுந்தகவல்!

தொடருந்தில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் தொடருந்து செலுத்துனர்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று முதல் இந்த திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து பாதைகளில் காட்டு யானைகள் நடமாட்டத்தை குறுந்தகவல் மூலம் செலுத்துனர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த தகவல் பரிமாற்றத்திற்கு விசேட வழிநடத்தல் மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.
Related posts:
பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!
யாழில் வாள் வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் - காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போத...
நாட்பட்ட நோயாளர்கள் சமூகத்திற்குள் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பா...
|
|