காடுகளின் அளவை 32 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவிப்பு!

Sunday, March 17th, 2024

நாட்டில், காடுகளின் அளவு 32 வீதமாக அதிகரிக்கின்ற பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பணியை நிறைவேற்றும் பணிகளில் என்னுடன் துறைசார் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக வனப்பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு இப்பாரிய பொறுப்பை வழங்கியுள்ளார். எனவே இப்பணியை இவ்வருட இறுதிக்குள் நடத்தி முடிக்கலாம் என்ற நம்பிக்கையில் பணியாற்றுகிறோம்.

எதிர்கால சந்ததிக்காக இந்த நாட்டின் வன வளங்களை பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.வனப்பரிமாணத்தை அதிகரிப்பதோடு அதற்கு இணையாக நாட்டின் காடழிப்பைக் கட்டுப்படுத்துவதும் பிரதான பொறுப்பாகும். சட்டத்துக்கு முரணான விதத்தில் காடழிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதை தவிர்த்தால் மட்டுமே எமது இலக்குகளை அடைய முடியும். எனவே இவ்விரண்டு பணிகளிலும் எமது அவதானத்தை செலுத்தி ஜனாதிபதியின் பணிப்புரையை நிறைவேற்ற முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: