காடழிப்பை கட்டுப்படுத்த களத்தில் இறங்குகின்றது இலங்கை விமானப்படை – பாதுகாப்பு செயலாளர் கடும் எச்சரிக்கை!
Thursday, November 26th, 2020காடழிப்பை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படையை களத்தில் இறக்க உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற முயற்சிகளைத் தடுக்குமாறு முப்படை மற்றும் பொலிஸாருக்கம் ஜனாதிபதி பணித்துள்ளார்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளை இலங்கை விமானப்படையின் வான்வழி சொத்துக்களைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் – மாவட்ட செயலாளர்கள், அரசு முகவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும், வன வளங்கள் குறைவதற்கு வழிவகுக்கும் சுற்றுச்சூழல் மோசமடைவதற்கு எதிராக நிற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் நில அபகரிப்புச் சம்பவங்களை குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர், நில அபகரிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க ஒரு சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Related posts:
மாணவர்களை அச்சுறுத்தும் வாய் புற்றுநோய்!
மைசூர் பருப்பு, மீன் ரின் நிர்ணய விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
இலங்கையில் 5 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா மரங்கள் – கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அனைத்து அர...
|
|