காடழிப்புக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க விசேட அதிரடிப்படை களத்தில்!

Tuesday, February 23rd, 2021

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் காடழிப்புக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அடங்கிய சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு, தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

காடழிப்பு, வேட்டையாடுதல் மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு அழிவை ஏற்படுத்துபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் இக்குழு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசேட அதிரடிப்படையினருக்கு 1997 என்ற அவசர தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான குற்றவாளிகளைக் கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் எல்லா நேரத்திலும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் “தவறு செய்தவர்களைத் தண்டிக்க ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை அழிப்பது என்பது தேசத்தை அழிப்பதைக் குறிக்கிறது.

எனவே, இந்த விஷயத்தில் ஜனாதிபதி தனது கவனத்தை செலுத்தியுள்ளார். அத்துடன் சரியான புரிதலுடன், நடவடிக்கை எடுக்குமாறு அவர் எனக்கு கட்டளையிட்டுள்ளார்.” என்றும் அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.

Related posts: