காசோலை மோசடி முறைப்பாடுகளுக்கு உடனடி நடவடிக்கை – யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு!

5 இலட்சத்திற்குட்பட்ட காசோலை மூலமான வர்த்தக மோசடிக்கு உள்ளானவர்கள் அந்தப் பொலிஸ் நிலையங்களிலும், 5 இலட்சத்திற்கும் 50 இலட்சத்திற்கம் இடைப்பட்ட காசோலை மூலமான வர்த்தக மோசடிக்கு உள்ளானவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திலும், 50 இலட்சத்திற்கு மேற்பட்ட காசோலை மோசடிகளுக்கு ஆளானவர்கள் கொழும்பில் உள்ள குற்றவியல் விசாரணைப் பிரிவிலும் முறைப்பாடு செய்ய முடியும். இவற்றுக்கு பொலிஸார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண வணிகர் கழக நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும், யாழ்.நகர வர்த்தகர்களுக்கும் மற்றும் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, மூத்த பொலிஸ் அத்தியகட்சர் கஸ்டன் ஸ்ரனிஸ்லாஸ் ஆகியோருக்கும் இடையிலான கூட்டமொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை மு.ப. 11 மணிக்கு யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|