காங்கேசன் துறைச் சீமெந்துத் தொழிற்சாலையினை மீளப் புனரமைப்பது தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்த உயரதிகாரிகள் ஆராய்வு!

Friday, November 11th, 2016

காங்கேசன் துறைச் சீமெந்துத் தொழிற்சாலையினை மீளப் புனரமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காகச் சீமெந்துத் தொழிற்சாலையின் மத்திய செயற்பாட்டு பணிப்பாளர் ஆர்.கே. மகேந்திர சில்வா தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை(10) கொழும்பிலிருந்து வருகை தந்தனர்.

இந்தக் குழுவினர் தொழிற்சாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். இதன் போது  சீமெந்துத் தொழிற்சாலையின் மத்திய செயற்பாட்டுப் பிரதிப் பணிப்பாளர், பிரதிச் செயலாளர், யாழ். மாவட்டச் சீமெந்துக்  கூட்டுத்தாபன உயரதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். தொழிற்சாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து அரசாங்கத்திற்கு முழுமையான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும் என மேற்படி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

unnamed

Related posts: