காங்கேசன் சீமேந்து ஆலை அங்கிருந்து அகற்றப்படும் – பிரதமர் ரணில்!

Monday, August 6th, 2018

காங்கேசன்துறை சீமெந்து ஆலையை அகற்றி அந்தப் பகுதியில் சிறு கைத்தொழிலை விஸ்தரிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. தற்போதுள்ள காணிகளில் பணிகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவி செய்ய முன்வந்துள்ளது.

இதேபோன்று காங்கேசன்துறை அபிவிருத்தி செய்யப்பட்டு துறைமுகமாக விஸ்தரிக்கப்படவுள்ளது. காங்கேசன்துறை சீமேந்து ஆலையை அகற்றி அந்தப் பகுதியில் தொழிலை விஸ்தரித்து தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எதிர்பாரத்துள்ளோம். பரந்தனில் ஐஸ் சேமிப்பு நிலையங்களையும் ஐஸ் ஆலையையும் அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: