காங்கேசன்துறை துறைமுகத்தின் விஸ்தரிப்பு குறித்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

காங்கேசன்துறை துறைமுகத்தின் விஸ்தரிப்பு குறித்து துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இந்த துறைமுகத்தின் விஸ்தரிப்புக்காக ஒரு ஆலோசனை நிறுவனம் உருவாக்கப்பட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தில் புதிய தரிப்பிடங்களை 7 மீற்றர் ஆழத்துக்கு அமைக்கவேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதைய நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தில 300 – 400 தொன்கள் எடைக்கொண்ட கப்பல்களே நங்கூரமிடக்கூடிய நிலை உள்ளது.
இதேவேளை துறைமுக விஸ்தரிப்புக்காக 15 ஏக்கர் மற்றும் 35 ஏக்கர் நிலங்கள் முறையே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
50,000 மாணவர்கள் அடையாள அட்டை பெறவில்லை - ஆட்பதிவுத் திணைக்களம்!
நகர்புறப் பாடசாலைகளை நாடாது கிராமப் பாடசாலையை வளருங்கள் - வலிகாமம் வலயக் கல்வி முகாமைத்துவ பிரதிக் க...
இஸ்ரேலிய பிரதமரை பதவியலிருந்து விலகுமாறு போராட்டம்: 55பேர் கைது!
|
|