காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு – குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவு!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சீமெந்து தொழிற்சலையில் கும்பல் ஒன்று இரும்பு திருட்டில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் திருட்டில் ஈடுபட்டு இருந்த மூவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 30 பேர் கொண்ட மாணவர் குழுவினால் தாக்கப்பட்டு மாணவன் காயம்!
நீர்வேலி கோர விபத்து: இருவரின் மரணத்திற்கு காரணமான சாரதிக்கு 2 வருட கடூழிய சிறை!
அலுவலகங்களின் உள்ளேயும் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவி...
|
|