காங்கேசன்துறை – காலி இடையேயான புதிய போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை – மகரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றை ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளது.
குறித்த புதிய பேருந்து இன்று திங்கட்கிழமைமுதல் இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. மகரகம வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே குறித்த புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுகிறது.
இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பமாகும் குறித்த சேவை இரவு 8.05மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்து பின்னர் 8.15 மணிக்கு புறப்பட்டு சாவகச்சேரி, கிளிநொச்சி, வவுனியா, அனுராதபுரம், கல்கமுவ ஊடாக மகரகம வைத்தியசாலையைச் சென்றடைந்து அதே பாதை ஊடாக காலை 8.40மணிக்கு காலியைச் சென்றடையும்.
பின்னர் அதேநாள் பிற்பகல் 4.30மணிக்கு காலியில் இருந்து சேவையை ஆரம்பித்து காலை 6.40மணிக்கு யாழ் நகரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|