கவிஞர் இப்னு அசுமத்துக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான சர்வதேச இலக்கிய விருது வழங்கி கௌரவிப்பு!

Saturday, January 1st, 2022

சிறந்த மொழிபெயர்பாளருக்கான 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இலக்கிய விருது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக மொழிபெயர்ப்பாளரும் கடற்றொழில் அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான டீஎம் பாரூக் என்னும் இயற்பெயர் கொண்ட இப்னு அசுமத் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனது.

இப்னு அசுமத் என்னும் புனைபெயரில் இலங்கையரல்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பாரூக் அவர்கள் பிறமொழிக் கவிதைகள், கதைகள் சிறுகதைகள் என்பவற்றை மொழிபெயர்ப்பு செய்து இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிவரும் கவிஞர் டீஎம் பாரூக் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த 27 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் செல்லமாக கவிஞர் – கலைச்செல்வன் என்று அழைக்கப்படும் இப்னு அசுமத் அவர்கள் இலக்கிய புலத்தில் நீண்டதொரு மொழிபெயர்ப்பு செயற்பாட்டடை செய்துவரும் நிலையில் அவருக்கு எதிர் பிரதிகள் இலக்கிய செயற்பாட்டு அமைப்பு சிறந்த மொழிபெயர்ப்புக்கான 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இலக்கிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

இந்நிலையில் எமது ஊடக வலையமைப்பிற்கும் சிரேஸ்ர ஆலோசகராகவும் வழிகாட்டடியாக இரந்து செயற்பட்டுவரும் இப்னு அசுமத் அவர்களுக்கு எமது டிடி தொலைக்காட்சியும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமை கொள்கின்றது.

Related posts: