“கவனமாக சென்று வாருங்கள்”யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Wednesday, July 18th, 2018

வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே ஆலோசனையின் பேரில் வடமாகாண ஆளுநர் செயலகம் முதலமைச்சர் அமைச்சு பொலிஸ் தலைமையகம் ஆகியன இணைந்து “கவனமாக சென்று வாருங்கள்” நிகழ்ச்சித்திட்டம் இன்று ஆரம்பித்தவைக்கப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 42 பேர் விபத்தினால் மரணமடைந்தும் 2045 பேர் வீதி விபத்தினால் காயமடைந்தும் உள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் வீதி ஒழுங்கு தொடர்பில் விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சரி செய்யும் வகையில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களின் ஆலோசனையின் பேரில் “கவனமாக சென்று வாருங்கள்” நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் 1000க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச்சாரதிகள் கலந்து கொண்டனர். கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த வீதி போக்குவரத்து பொலிஸாரின் செயல்முறை காட்சி நாடகங்களும் வீதியில் அரங்கேற்றப்பட்டன. வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை வட மாகாண ஆளுநர் றெஜினோல் குரே ஒட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

Related posts: