கழிவுப்பொருட்களை முறைகேடாக வீசும் நபர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை!

Thursday, October 27th, 2016

முறைகேடாக கழிவுகளை வீசும் நபர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சமூக வலைத்தளமான முகநூல்(Facebook) மூலம் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரியவின் தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

மேல் மாகாணத்தில் கழிவுகள் முகாமைத்துவத்திற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடக்கப்பட்டுள்ளதாகவும் கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் மூலம் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

7186d8f4ae5b9a845e8d12dfb25a0b33_L