கழிவுக் கொள்கலன்கள் தொடர்பில் பிரித்தானியாவில் விசாரணை!

Thursday, July 25th, 2019

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் அந்நாட்டின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரத் திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரபல செய்திப் பத்திரிகையான டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மீள் சுழற்சிக்காக பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கொள்கலன்களுக்குள் இருந்து மனித உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, குறித்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்புவதாக இலங்கை அதிகாரிகள் அறிவித்ததை அடுத்து, இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட 111 கொள்கலன்கள் வைக்கப்பட்டிருந்த கொழும்புத் துறைமுகத்திலுள்ள பிரிவொன்றிலிருந்து அதிகளவு துர்நாற்றம் வந்தமை தொடர்பில் ஆராய்ந்து பார்த்தபோதே இந்தத் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, ‘டெலிகிராப்’ பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: