கழிவுகளைத் தரம் பிரித்துப் போடுங்கள் – சுகாதாரப் பணிப்பாளர் மக்களுக்கு அறிவுறுத்தல்!

Friday, January 11th, 2019

டெங்குத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தமது வீடுகளிலுள்ள கழிவுகளைத் தரம்பிரித்துக் குப்பைத் தொட்டிகளில் கொட்டுங்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் தமது வீடுகளில் உள்ள கழிவுகளை உள்ளுராட்சி சபைகளால் ஒதுக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் தரம் பிரித்துக் கொட்டுங்கள். உக்கக் கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் எனத் தரம்பிரித்துக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதன் ஊடாக உள்ளுராட்சி சபையினரின் கழிவகற்றல் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

இனிவரும் இரண்டு மாதங்களுக்கு நுளம்புகள் பெருக்கம் அதிகமாக இருக்கும். எனவே வீடுகளில் நுளம்புகள் பெருகும் இடங்களைச் சுத்தம் செய்யுங்கள். சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக அரச மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

Related posts: